search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு நிறைவு"

    மதுரையை தவிர 37 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சரியாக 6 மணிக்கு நிறைவடைந்தது. #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடந்தது.

    அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

    தமிழகத்தில் மதுரை தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மீதமுள்ள 37 தொகுதிகளிலும் சரியாக மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. டோக்கன் கொடுக்கப்படும் சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வாக்களிக்க கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #TNElections2019
    17-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக 91 தொகுதிகளில் தொடங்கி பலத்த பாதுகாப்புடன் விறுவிறுப்பாக இன்று நடந்து முடிந்தது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் முன்னதாகவே வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். 



    அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் அனைத்து தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019
    ராஜஸ்தானில் 72.67 சதவீதமும், தெலுங்கானாவில் 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #Rajasthan #Telangana #AssemblyElections #ElectionCommision
    புதுடெல்லி:

    தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 119 இடங்களை கொண்ட சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு  மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. 

    தெலுங்கானா மாநிலத்தில் 67 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    ஆனால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



    இதேபோல், சட்டசபை தேர்தல் நடைபெற்ற மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 200 இடங்கள் கொண்ட சட்டசபையில் ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    மாலை 5 மணியுடன் நிறைவடைந்த ராஜஸ்தானில் 72.67 சதவீத  வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இங்கு பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. 

    இதற்கிடையே ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.  நாடாளுமன்ற கூட்டத்தொடரும் அன்றைய நாளில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rajasthan #Telangana #AssemblyElections #ElectionCommision
    ×